Thursday, November 06, 2008

466. நீதிமன்றத்தில் வக்கீல்கள் செய்யும் காமெடி

வக்கீல்: அவளுக்கு 3 குழந்தைகள், சரியா ?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வளவு மகன்கள் ?
சாட்சி: ஒன்று கூட கிடையாது
வக்கீல்: எவ்வளவு மகள்கள்?
சாட்சி: என்ன, என்னை நக்கல் செய்கிறீர்களா ? கனம் நீதிபதி அவர்களே, எனக்கு இந்த வக்கீல் தேவையில்லை, வேறு வக்கீலை ஏற்பாடு செய்ய முடியமா ????


வக்கீல்: உங்களின் முதல் திருமணம் எவ்வாறு முடிவுக்கு வந்தது ?
சாட்சி: மரணத்தின் வாயிலாக
வக்கீல்: யாருடைய மரணத்தினால்?
சாட்சி: தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் ????


வக்கீல்: அந்த நபரை விவரிக்க முடியுமா?
சாட்சி: அவர் நடுத்தர உயரமாக, தாடியும் வைத்து இருந்தார்.
வக்கீல்: அந்த நபர் ஆணா பெண்ணா ?
சாட்சி: நீங்கள் கண்டுபிடியுங்களேன் !?!?!


வக்கீல்: நான் உங்கள் வக்கீலுக்கு அனுப்பிய நோட்டீஸை முன்னிட்டுத் தானே, இக்காலையில் இங்கு தங்களின் தோற்றம் அமைந்தது?
சாட்சி: இல்லை, நான் பணிக்குச் செல்கையில் பொதுவாக இப்படித் தான் அலங்கரித்துக் கொள்வேன்!?!?


வக்கீல்: டாக்டர், எத்தனை பிரேதப் பரிசோதனைகள் தாங்கள் இறந்தவர்கள் மீது செய்து இருக்கிறீர்கள் ?
சாட்சி: என்னுடைய அனைத்து பிரேதப் பரிசோதனைகளும் இறந்தவர்கள் மீதே நடந்துள்ளன!!! அதே கேள்வியை சற்று மாற்றி அமைத்துக் கேட்க தங்களுக்கு விருப்பமா ?!?!


வக்கீல்: தங்களின் அனைத்து பதில்களும் வாய்மொழியாக இருத்தல் அவசியம், சரியா? நீங்கள் எந்தப் பள்ளிக்கு சென்றீர்கள்?
சாட்சி: வாய்மொழி!?!?!


வக்கீல்: தாங்கள் எத்தனை மணிக்கு பிரேதத்தை பரிசோதித்தீர்கள் என்பதை நினைவு கூர முடியமா?
சாட்சி: பிரேதப் பரிசோதனை இரவு 8.30 மணிக்குத் தொடங்கியது
வக்கீல்: திரு.ரகுராமன் அந்நேரம் இறந்து போயிருந்தாரா ?
சாட்சி: இல்லை, அவர் பரிசோதனை மேஜையின் மீது அமர்ந்தவாறு, நான் ஏன் இந்த பிரேதப் பரிசோதனையை அவர் மீது செய்து கொண்டிருந்தேன் என்ற ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தார் !?!?!

வக்கீல்: இந்த மையஸ்தேனியா கிராவிஸ் (myasthenia gravis) ஆனது தங்களின் நினைவாற்றலை பாதிக்குமா?
சாட்சி: ஆம்
வக்கீல்: எவ்வகையில் அது தங்கள் நினைவாற்றலை பாதிக்கிறது ????
சாட்சி: எனக்கு மறதி ஏற்படுகிறது !!!
வக்கீல்: ஓ மறதியா ? நீங்கள் மறந்தது குறித்து ஏதாவது எடுத்துக்காட்டு தர இயலுமா ?!?!?!

வக்கீல்: காலை எழுந்தவுடன் உங்கள் கணவர் உங்களிடம் என்ன கேட்டார் ?
சாட்சி: அவர், "சுசீலா, நான் எங்கிருக்கிறேன்?" என்றார்
வக்கீல்: அக்கேள்வி தங்களை ஏன் கோபம் கொள்ள வைத்தது?
சாட்சி: ஏனெனில், என் பெயர் ஜானகி !?!?!


கீழுள்ளது தான் best of the best :)

வக்கீல்: டாக்டர், தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் துவங்குவதற்கு முன், நாடித்துடிப்பை கவனித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: ரத்த அழுத்தத்தை சோதித்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: சுவாசம் உள்ளதா என்று பார்த்தீர்களா ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எனவே, தாங்கள் பிரேதப் பரிசோதனையைத் தொடங்கிய சமயம், அந்த நோயாளி உயிரோடு இருந்திருக்கக் கூடிய சாத்தியம் உள்ளது, அப்படித் தானே ?
சாட்சி: இல்லை
வக்கீல்: எப்படி அதை அவ்வளவு நிச்சயமாக உங்களால் கூற முடிகிறது ?
சாட்சி: ஏனெனில், அம்மனிதரின் மூளையானது எனது மேஜையின் மீதிருந்த ஒரு குடுவைக்குள் அமர்ந்திருந்தது !?!?
வக்கீல்: ஓ அப்படியா? இருந்தும், அபோது அந்த மனிதர் உயிரோடு இருந்திருக்க சாத்தியமா???
சாட்சி: உண்டு, அம்மனிதர் உயிரோடு இருந்திருக்கவும், சட்டம் பயின்று கொண்டிருக்கவும் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே உணர்கிறேன் !?!?!?


பி.கு: மேற்கூறப்பட்டவை எல்லாம், அமெரிக்க நீதிமன்றங்களில் நிஜமாகவே பேசப்பட்டவை என்பதை தயவு செய்து நம்புங்கள் :) வக்கீல்கள் எப்பேர்ப்பட்ட புத்திசாலிகள் என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன் ;-)

எ.அ.பாலா

நன்றி: Disorder in the American Courts

9 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)

admin said...

Nandri.. Innum pala nagaichuvaigalai ethirparkiren

dondu(#11168674346665545885) said...

நீங்கள் சற்றே தாமதமாக வந்துள்ளீர்கள். பார்க்க: http://devakottai.blogspot.com/2008/11/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

யு.எஸ்.தமிழன் said...

இதெல்லாம் வக்கீல்கள் படிச்சுட்டுதான் இருக்காங்க, நேரம் வரும்போது டின் கட்டப்போறாங்க!

:)

enRenRum-anbudan.BALA said...

உஷா சுதர்ஷன், யு.எஸ்.தமிழன்,
வருகைக்கு நன்றி :)

டோ ண்டு சார்,
சில துணுக்குகள் அப்பதிவில் இல்லை !!! அது போல, எனது சில துணுக்குகள் extended ஆக உள்ளதை கவனித்தீர்களா ? அதனால், லேட் என்று ஒற்றை வார்த்தையில் நிராகரித்தால் எப்படி ? :) மேலும், நமது மொழிபெயர்ப்பில் வித்தியாசம் உள்ளது !

எ.அ.பாலா

யோசிப்பவர் said...

பிகு உண்மையா? நம்பவே முடியலை. அதுவும் கடைசி துணுக்கு!! இப்படிக் கூடவா?!:-D

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒன்னும் சொல்றதுக்கில்ல.

இலவசக்கொத்தனார் said...

என்னது காந்தி செத்துட்டாரா? இந்த பார்வேர்ட் மெயிலை எல்லாம் பதிவா போடறதை நிறுத்தும்.

enRenRum-anbudan.BALA said...

யோசிப்பவர், sureஷ்,
நன்றி.

கொத்ஸ்,
உப்புமா மேட்டர் ஒண்ணும் ஆப்படலை :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails